இதுக்கு மேல பெட்ரோல் பைக் தேவைப்படாது போல  – ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 180 கி.மீ வரை பயணிக்கலாம்

உலககெங்கும் பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்து வருவதால், மக்கள் மின்சார வாகனத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் பெரும்பாலான முன்னணி கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனத்தை திருப்பியிருக்கின்றனர். ஏறக்குறைய, பெட்ரோல், டீசல் வாகனங்களின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். அதே நேரத்தில், எலக்டிரிக் வாகன சந்தை மெதுவாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நிலையில், அவற்றில் புதுமையை புகுத்தி, வாடிக்கையாளர்களின் ஏகோப்பித்த வரவேற்பை பெற வேண்டும் என்பதில் மிக கவனமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கின்றன.

 அதில் டார்க் கிராடோஸ் (Tork Kratos) என்ற புதிய இருசக்கர வாகனமும் சேர்க்கப்பட்டுள்ளது.எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பு நிறுவ்னமான டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) , இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் கிராடோஸ் (Kratos) மற்றும் கிராடோஸ் ஆர் (Kratos R) என இரண்டு வகைகளில் கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்ட மற்றும் நீண்ட தூரம் அதிக மைலேஜ் தரும் மின்சார பைக்கை  (Electric Motorcycle) அறிமுகப்படுத்தியுள்ளது.

கான்செப்ட் மாடைலை விட பெருமளவு அப்டேட் செய்யப்பட்டு இருப்பதாக டார்க் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. முற்றிலும்  புது வடிவமைப்பு கொண்டிருக்கும் டார்க் கிராடோஸ் மோட்டார்சைக்கிளில், புதிதாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பைக்கில் பெருமளவு புதிய அம்சம் அப்டேட் செய்யப்பட்டு உருவாக்கியது மட்டுமல்லாமல், பிரீமியம் அம்சங்களுடன் ஸ்போர்ட் வடிவமைப்பையும் வழங்கியுள்ளது. இது பைக்கை மேலும் கவர்ச்சிகரமானதாக்கி உள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி மற்றும் மோட்டார் எனர்ஜி பற்றி பேசுகையில், 4kWh, 48V திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பேக்அப் மற்றும் 28 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை உருவாக்கும் 7.5 Kw பவர் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் வீச்சு மற்றும் வேகத்தைப் பொறுத்தவரை, இந்த பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், மணிக்கு 100 கிமீ வேகத்தில் 180 கிமீ தூரம் வரை பயணம் செய்யலாம் என்று நிறுவனம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *