இனிமேல் நான் தான் உங்களுக்கு அண்ணன்…605கி.மீ மைலேஜ் தரும் கார்

பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாற்றாக தற்போது ஹைட்ரஜன் கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஹைட்ரஜன் கார்கள், உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம், இந்தியாவில் மிராய் என்னும் முதல் ஹைட்ரஜன் காரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
2014-ம் ஆண்டு தனது தாயகமான ஜப்பானில் தான் டொயோட்டா மிராயின் நிறுவனம் தனது முதல் தலைமுறை காரை அறிமுகம் செய்தது.அதை தொடர்ந்து ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற சில நாடுகளிலும் மிராய் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

உலகிலேயே ஹைட்ரஜன் மூலமாக ஏற்படும் மின்சாரத்தில் ஓடும் முதன்மையான கார்களில் ஒன்று தான் இந்த டொயோட்டா மிராய் கார். இந்தியாவிலும் இந்த ஹைட்ரஜன் கார் தான் முதல் ஹைட்ரஜன் காராக உள்ளது. இந்த ஹைட்ரஜன் கார் 650 கி.மீ வரை மைலேஜ் தரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்ப 3 – 5 நிமிடங்கள் போதுமானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள்
மார்ச் 30ம் தேதி அன்று பாராளுமன்றத்திற்கு ஹைட்ரஜன் காரில் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது.