அசத்தும் இந்தியா.. பேட்டரி மூலம் இயங்கும் பேருந்து..!

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் வகையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இகேஏ நிறுவனம் புதிய பஸ் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நேரில் பார்வையிட்டார்.

இந்த பஸ்ஸை பார்வையிட்ட பிறகு நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி உள்ளார். பஸ்சின் செயல்பாடுகளை இகேஏ மற்றும் பினாக்கிள் நிறுவனத்தின் தலைவர் சுதிர் மேத்தா விளக்கினார்.அந்த விளக்கத்தில் இ9 என்ற பெயரில் முதலாவது பேட்டரி பஸ்ஸை உருவாக்கி உள்ளோம்.

இது மோனோகாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பஸ்  வழக்கமாக டீசலில் இயங்கும் பஸ்ஸின் விலையை விட குறைவானதாக இருக்கும் என்றார். மேலும் இந்த பஸ்ஸின் ஏர் சஸ்பென்ஷன் வசதி  பொருத்தப்பட்டுள்ளது என்றும், இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 200 கிலோவாட் திறன் கொண்டது என குறிப்பிட்டார்.

2,500 மி.மீ. அகலம் கொண்ட பஸ்ஸில் 31 பேர் பயணிக்க முடியும் என்றார்.  இது தவிர வாகன கட்டுப்பாடு முழுவதற்குமான சாஃப்ட்வேரை இந்நிறுவனமே உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வசதி கொண்டது. மிகச் சிறப்பான பயண அனுபவத்தை அளிக்கும் என நிறுவனத்தின் தலைவர் சுதிர் மேத்தா விளக்கினார்.இதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு, அதைப் பயன்படுத்துவோருக்கு உரிய பலனை அளிக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…