புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்!

பொதுவாக புருவம் அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய் ஒரு சிறந்த வழி என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.அதாவது 8 சொட்டு விளக்கெண்ணையுடன், 10 சொட்டு ஆலிவ் எண்ணையை கலந்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள்.
இந்த எண்ணெய்யை ஒரு காற்று புகாதா பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.பின் இந்த எண்ணெய்யை தினமும் தூங்குவதற்கு முன்பு தங்களது புருவத்தில் அப்பளை செய்து, சிறிது நேரம் மாசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே வைத்து இருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுகவேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர , ஒரு மாதத்திலேயே புருவம் மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருப்பதை தாங்களே உணரலாம்.