முகத்திற்க்கு பொலிவு தரும் Almond Oil!

சரும நிறத்தை மாற்றுவதற்கு நாம் பொதுவாக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அது மட்டும் இல்லாமல் அழகு நிலையங்களுக்கு சென்று பலவகையான பேசியல் பேக்குகளையும் முகத்தில் பூசி சரும நிறத்தை பொலிவாக்க பெண்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அந்த முயற்சி எதுவும் நிரந்தர தீர்வை தராது. இயற்கையான முயற்சியே நிரந்தரமான சரும பொலிவை தரும்.
சரும நிறத்தை அதிகரிப்பதற்கு எண்ணெய்கள் நமக்கு உதவும். அதில் பலரும் பரவலாக பயன்படுத்துவது ஆலிவ் மற்றும் பாதாம் ஆயில். ஆனால், சிலருக்கு பாதாம் ஆயில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. இந்த பதிவில் நாம் பதம் எண்ணெய்யை எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் பாதாம் ஆயில் சிறிதளவு மற்றும் விட்டமின் இ ஆயில் இரண்டையும் எடுத்து கொண்டு அதை நன்றாக கலக்க வேண்டும். பின்பு, அதை கருவளையம் உள்ள இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது போல் நாம் தினமும் செய்து வந்தால் கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.