பற்களை வெள்ளையாக வைத்துக்கொள்ள இந்த பழங்களை உண்ன வேண்டும்!

நாம் தினசரி பல உணவுகளை உண்டு வருகிறோம். பலவிதமான தண்ணீர் மற்றும் பழ சாறுகளையும் உண்டு வருகிறோம், ஆதனால் நம் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. பற்களை பளபளவென்று வெள்ளை நிறத்தில் வைத்து கொள்ள நாம் பலவிதமான டூத் பேஸ்டுகளை உபயோகித்து வருகிறோம். பல்வேறு பல் மருத்துவமனைக்கும் சென்று வருகிறோம். ஆனால் இயற்க்கையான முறையில் பழங்களை உட்கொண்டு நம் பற்களை பளபளவென்று வெண்மையாக வைத்துக்கொள்ளலாம்.

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, பற்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம், கால்சியம் மற்றும் மாங்கனீசு போன்றவை பற்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, மஞ்சள் கறைகளையும் போக்கி, வெண்மையாக்கும். எனவே பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க வேண்டுமானால், தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

தர்பூசணியிலும் மாலிக் அமிலம் உள்ளது. இதில் மாலிக் அமிலம் ஸ்ட்ராபெர்ரியை விட அதிகமாக உள்ளது. மேலும் மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்கும் மற்றும் வாயில் எச்சில் சுரப்பை அதிகரிக்கும். அதற்கு தர்பூசணியை சாப்பிடுவதோடு, அதைக் கொண்டு பற்களைத் தேய்ப்பதன் மூலமும் பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கலாம்.

அன்னாசி அன்னாசி இயற்கையாகவே துகள்களை கரைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்பழம் ப்ரோமெலைன் எனப்படும் புரோட்டியோலிடிக் நொதியைக் கொண்டுள்ளது. இது பெல்லிகல் லேயரில் உள்ளவை உட்பட புரதங்களை உடைக்கும். பற்கள் பெல்லிகல் எனப்படும் புரத அடுக்குடன் மூடப்பட்டிருக்கும். இந்த அடுக்கு பற்களைப் பாதுகாக்கிறது. அதே வேளையில் உணவுகளில் உள்ள நிறமியையும் உறிஞ்சுகிறது. இதனால் பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அன்னாசியை தினமும் சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…