ரெட் அலர்ட்… 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களமிறக்கிய தமிழக அரசு!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவமழை வேற லெவலுக்கு வெளுத்து வாங்கி வருகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் என நீர்நிலைகளைக் கடந்து சாலைகள், வீடுகள் என மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் பெய்து வரும் கனமழையால் தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதனிடையே கடந்த 7ம் தேதி சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்காக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. கமல் கிஷோர், கணேசன், சந்தீப் நந்தூரி, வினய், மகேஸ்வரி ரவிகுமார், பிரதீப் குமார், சுரேஷ்குமார், பழனிசாமி, ராஜாமணி, விஜயலட்சுமி, சங்கர்லால், நிர்மல்ராஜ், மலர்விழி, சிவஞானம் வீரராகவ ராவ் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கண்காணிப்பதற்காக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன் படி கடலூருக்கு அருண் ராய், திருச்சி -ஜெயகாந்தன், வேலூர் – நந்தகுமார், நாகை – பாஸ்கரன், ஈரோடு – பிரபாகர், ராணிப்பேட்டை – செல்வராஜ், மதுரை – வெங்கடேஷ், திருவள்ளூர் – ஆனந்தகுமார், விருதுநகர் – காமராஜ், அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு அனில் மேஷ்ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *