சம்பளம் கிடையாதா?… அந்தர் பல்டி அடித்த மின்வாரியம்!

தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத சம்பளம் கிடையாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த அறிவிப்பு குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டந்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அதிகரிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மதுரை மண்டல தலைமை பொறியாளர் மின்வாரிய ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து பணியாளர்களும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அலுவலர் மற்றும் பணியாளர்களின் டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் மின்வாரியம் தற்போது விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *