உலகம் முழுவதும் 48.6% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்ததோடு, உணவின்றியும் தவித்து வந்தனர்.

இதனை தடுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய கொரோன வைரஸான ஓமைக்ரான் பரவ தொடங்கியது. இதனால் மீண்டும் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தில் வருகின்றனர்.உலகம் முழுக்க கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவலுக்குப் பின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு தவணையாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 385 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 48.6 சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.மேலும் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 5.3 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.47 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.8 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.உலகம் முழுவதும் தற்போது வரை 909 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.ஒமைக்ரான் தொற்று பரசி வரும் சூழலில் இந்தியாவில் இதுவரை 145.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *