#Budget2022 வீடு, குடிநீர் திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு தெரியுமா?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த நிதி நிலை அறிக்கையில், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் திட்டங்கள் புதுப்பிக்கப்படும். நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு 18 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன
மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடக்கப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு