ALERT: ஆண்ட்ராய்டு போன் பயனாளிகளே உஷார்… வந்தாச்சு புது ஆபத்து!

ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள பணப்பறிமாற்ற செயலிகளை தாக்கி பணம் பறிக்கும் புதிய செல்போன் வைரஸ் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவரது கவனமும் தற்போது பிரேட்டா என்ற வைரஸ் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது, இந்த வைரஸும் ஆண்ட்ராய்டு போனுக்குள் நுழைந்துவிடுவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு வைரஸ்கள் கொரோனா போலவே உருமாறும் தன்மை கொண்டது என்பது அதிர்ச்சியளிக்க கூடிய தகவல்களாக அமைந்துள்ளது.
ஹேக்கர்கள் இதுபோன்ற வைரஸ்களை ஆண்ட்ராய்டு போனுக்குள் அனுப்பி, ஒருவரது போனுக்குள் உள்ள வங்கி செயலி மற்றும் பணப்பறிமாற்ற ஆப்களை உலவு பார்ப்பதாகவும், சரியான நேரம் வரும் போது, அந்த பணத்தை ஹேக் செய்து எடுத்துக்கொண்டு செல்போனில் உள்ள மொத்த தகவல்களையும் அழித்துவிட்டு செல்வதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேட்டா வைரஸ் 2021ம் ஆண்டு நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இத்தாலி, போலந்து, இங்கிலாந்து, லத்தின் அமெரிக்கா ஆகிய நாடுகளை குறிவைத்து பரப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.