இது ஒரு தீவிரவாத செயல்… காவல்நிலையத்தில் பாஜக கதறல்!

BJP

தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில அலுவலக செயலாளர் சந்திரன் என்பவர் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் அளித்துள்ள புகாரில், கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது தீவிரவாத செயல் எனக்கூறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் இன்று 10.02.2022 அதிகாலை ஒன்றரை மணி அளவில் மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்து கமலாலயத்தின் மீது மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

தீய நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் அங்கு தங்கி இருப்பவர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு குண்டு வீசி இருக்கிறார்கள். மேலும் இதற்கு முன்பாகவும் 2007 ம் ஆண்டு இதே போன்ற தீவிரவாத சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிரவாத செயலை செய்தவர்கள் யார் என்று உடனடியாக கண்டுபிடித்து, அவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்திட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். இந்த தீவிரவாத செயல் நடைபெற்றதை அடுத்து பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு கூடுதல் உயர் பாதுகாப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…