மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்

உத்தரப் பிரதேசம் , பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மணிப்பூரின் சட்டமன்ற பதவிக்காலம் அடுத்த மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி என்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் மணிப்பூரில் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28-ம் தேதி மாற்றப்பட்டிருக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
மேலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதிக்கு பதில் மார்ச் 5-ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.