54 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்திய அரசாங்கம் முடிவு

கடந்த 70 ஆண்டுகளுக்கும்  மேலாக  இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் சில சமயங்களில் போராகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்தியா-சீன படைகளுக்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

இந்த மோதலை தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 29-ம் தேதி டிக்டாக் உட்பட 58 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் மேலும் பல சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசுதடை விதித்தது.  

இந்நிலையில், பியூட்டி கேமரா, ஸ்வீட் கேமரா ஹெச்டி, புயூட்டி மேகரா செல்பி, பேஸ் பூஸ்டர், ஆப் லாக்கர், டுயல் ஸ்பேஸ் லைட் உள்பட மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மேலும் 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த 54 சீன செயலிகளுக்கும் தடை விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இந்திய அரசு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி Sweet selfie hd, Beauty Camera, Selfie Camera போன்ற செயலிகள் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 200-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…