கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது. இதனையடுத்து அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையும் 19-ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 19-ம் தேதி காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.