உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்குச் சாவடியை அறிவது எப்படி?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள், தங்கள் பெயர் மற்றும் வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின் போது 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து, நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக, வார்டு வாரியான பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல்களை, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி, வாக்காளர்கள் தங்களின் பெயர் மற்றும் வார்டு எந்த எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.இந்த இணையதளத்தில், ‘உங்கள் ஓட்டுச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற வசதியை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்து, உங்கள் வாக்குச்சாவடி விபரங்களை அறிந்து கொள்ளலாம். வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும்படி, மாநில தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.