#BREAKING கோட்டை விட்ட எஸ்.பி.வேலுமணி… கொடிநாட்டிய திமுக… பரபரக்கும் தொண்டாமுத்தூர்!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யாரு என அதிமுக, திமுக இடையே யுத்தம் நடந்த நிலையில், திமுக அடுத்தடுத்து வெற்றி கொடி நாட்டி வருகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூரில் திமுக மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக வசமானது. 15 வார்டுகளில் 12 வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், 3ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….