ரஷ்ய விளம்பரங்களுக்கு தடை விதித்த கூகுள்

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம், விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் இனி கூகுள் வலைதளம் மூலம் விளம்பரம் எதையும் செய்ய முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷ்ய அரசு ஊடகங்களின் வர்த்தகத்தையும், விளம்பரங்களையும் உலகம் முழுவதும் இணையத்தில் தடை செய்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published.