நின்றது போர் – உக்ரைனுடன் பேச்சுவார்த்தையில் இறங்கிய ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை தொடங்கியது.ரஷ்யா படையெடுப்புக்கு எதிராகவும், முக்கிய நகரங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும், உக்ரைன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.பெலாரஸில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனுடன் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ளது என பேச்சுவார்த்தை நடுவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தரப்பில், ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறிய நிலையில் தான் இந்த பேச்சுவார்த்தையானது ஒப்புக்கொள்ளப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக்கூட்டத்தை கூட்ட உள்ளது. இந்த கூட்டத்தை இந்தியா வாக்களிக்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைனிய எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்ய படையின் வேகம் குறைந்துவிட்டதாக என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.உக்ரைன் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தனது இரண்டாவது நகரமான கார்கிவில் இருந்து ரஷ்ய துருப்புக்களை வெளியேற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைனில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 102 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் சண்டையிலிருந்து வெளியேறி வருவதாக ஐநா அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது. மொத்த எண்ணிக்கை 400,000 ஐ எட்டுவதால் பெரும்பாலானவர்கள் போலந்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். மற்றவர்கள் ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா மற்றும் ஸ்லோவாக்கியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பெர்லினில் இருந்து பாக்தாத் முதல் குய்ட்டோ வரையிலான ஒற்றுமை ஊர்வலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். ரஷ்யாவிற்குள்ளேயே அதன் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 5,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குகூள், பேஸ்புக் மூலம் ரஷ்ய அரசு ஊடகங்கள் வருமானம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைனில் இன்டர்நெட் சேவையை முடக்கியுள்ள நிலையில், உக்ரைனில் செயற்கைகோள் மூலம் பிரான்ட்பேண்ட் சேவையை வழங்குமாறு ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.