மீண்டும் ஓர் ஹெலிகாப்டர் விபத்து… பைலட் பலியான பரிதாபம்..!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீட்டா(cheetah) என்ற பெயர் கொண்ட இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று ஜம்மு காஷ்மீரில் பரோம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பைலட்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இதனை தற்போது இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து குறித்த காரணங்கள் விசாரணை முடிந்த பின்னரே தெரியவரும்.

பாதுகாப்பு துறை சார்பிலும் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….