பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று  தாக்கல் செய்யப்பட்ட திட்டங்கள் 

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் தலைமையில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கிடையே  பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது .

அதன்படி 2021 -2022 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்  இன்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவையில்  நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் அவை  பின்வருமாறு..

சட்டப்பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அ.தி.மு.க கட்சியினர்  வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி அமளியில் தொடங்கப்பட்ட கூட்டத்தொடரில்,தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் அறிவித்த திட்டங்களின் தொகுப்பு இதோ    

1. மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி கொள்கையில் ரூ.200 கோடி ஒதுக்கீடு 

2.பறவைகள் மற்றும்  விலங்குகளுக்கு  பூங்கா அமைக்கப்படும் ….

3.சுய உதவிக்குழு  மற்றும் விவசாய கடனுக்கு ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.

4. உக்ரைனில்  நடந்த போரின் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தமிழகம்  திரும்பிய  மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பை தொடர ஒன்றிய அரசுக்கு கோரிக்கை அனுப்பட்டுள்ளது .

5.கீழ்பாக்கம் மனநல காப்பகத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு. 

6.அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி தொடரும்  மாணவிகளுக்கு  மாதம் ரூ.1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

7.எம் ஜி ஆர் சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1,949 கோடி ஒதுக்கீடு.

8.சிறுபான்மை வழிபாட்டு தளங்களை  சீரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு.

9.மானிய விலையில் வீடுகள் கட்ட ரூ.4,848 கோடி ஒதுக்கீடு.

10.அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு சுமார் ரூ.162 கோடி ஒதுக்கீடு.

11. ஊரக வேலைத் திட்டத்திற்கு  ரூ.2800 கோடி ஒதுக்கீடு.

12.கலைஞர்  நகர்ப்புற மேம்பாடு நிதிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

13.சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. 

14.புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2208 கோடி ஒதுக்கீடு.

15.அனைத்து மாவட்டகளிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

16.மகளிர் பயணிகளுக்கு உதவும் விதமாக, அதிக பேருந்துகள் இயக்கப்படும் . 

17.சென்னை வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.500 கோடி ஒதுக்க்கீடு. 

18.தமிழ் மொழியை  ஆய்வு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.

19.தமிழக  காவல்துறைக்கு ரூ.10,282 கோடி ஒதுக்கப்படும். 

21 மொழிகளில் பெரியார் புத்தகம் மற்றும் அவரின்  சிந்தனைகளை வெளியிட சுமார் 5 கோடி ஒதுக்கப்படும்.

22.தமிழகத்தில் உள்ள பழமையான அரசு கட்டிடங்களை  சீரமைக்க

 ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.

23.விழுப்புரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க  நிதி ஒதுக்கப்படும்.

24.புதிய வானிலை கட்டிடம் உருவாக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும்.

25.மாணவர்களின்  பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.928 கோடி  ஒதுக்கீடு. 

26.வட்டி இல்லா பயிர் கடன் திட்டத்திற்கு  ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.

27.சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

28. 10 கோடியில்  பூண்டியில் புதிய  பூங்கா அமைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.