விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்று… வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!

கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 7.5 லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு 132 கோடி ஒதுக்கீடு, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு 71 கோடி ஒதுக்கீடு, நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மானாவாரி நில தொகுப்புக்கு 132 கோடி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கிராமங்களில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…