‘ரூ.1 லட்சம் நிதியுதவி’… விவசாயிகளின் வருவாயை பெருக்க புதிய திட்டம்… !

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பிற்காக “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” திட்டம், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு என பல அறிவிப்புகள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகளின் உடனடி தேவையை பூர்த்தி செய்யவும், அவரது வருவாயை உயர்த்தவும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் ஆர்வம் உள்ள விவசாயிகள் மண்புழு உரம், இயற்கை உரம் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். பயிர்காப்பீட்டு திட்டத்திற்கு பட்ஜெட்டில் தமிழக அரசின் பங்காக ரூ2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….