இன்று தாக்கலாகிறது வேளாண் பட்ஜெட்… விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறுமா?

Farmer

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2022-23 ஆண்டுக்கான முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பிற்காக “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” திட்டம், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு என பல அறிவிப்புகள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் துறையில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் வெளியாகும் என விவசாயிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நெல் விலையை உயர்த்த வேண்டும், உரத் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும், இடுபொருட்களின் விலை உயர்வால், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் பயன்படுத்துவதில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் விதமாக பண்ணை குட்டை ஏற்படுத்த வேண்டும், பெண் விவசாயிகளுக்கு என தனி அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும் உள்ளிட்டவை விவசாயிகளின் கோரிக்கைகளாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.