இன்று உருவாகிறது அசானி புயல்… எங்கு கரையை கடக்கப்போகிறது தெரியுமா?

Asani

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறும் என்றும், அதற்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் உருவானதும் முதற்கட்டமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்கதேசம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவுகளில் புயல் கரையை கடக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….