துபாயில் முதல்வர்… உற்சாக வரவேற்பு கொடுத்த தமிழர்கள்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய், அபுதாபி நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
192 நாடுகள் பங்கேற்கும் துபாய் Expo 2020 கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழ்நாட்டிற்கான அரங்கை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வார நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.
துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும், வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்க முக்கிய துறைகளின் அமைச்சர்கள் உடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சந்திப்பு நிகழவுள்ளது. அபுதாபியில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்தத்தற்காக 28ம் தேதி அபுதாபி வாழ் தமிழ் சமூகம் நடத்தும் பாராட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.