நாங்க கொடுத்த சவுண்ட் அப்படி… காவல்துறைக்கு அண்ணாமலை அட்வைஸ்!

விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பாஜக கொடுத்த குரல் காரணமாகவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜக.,வின் முதல் குரலின் எதிரொலியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலாக பாஜக செயல்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
காவல்துறை ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாஜக பட்டாசு தொழிலுக்கு 100 சதவீத ஆதரவு தெரிவிப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.