BREAKING 144 தடை உத்தரவு வாபஸ்…. திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

Nadarajar temple

சிதம்பரம் நகருக்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகப் பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிற்றம்பலம் மேடையில் ஏறி யாரும் தரிசனம் செய்யக்கூடாது, தேவாரம் பாடக்கூடாது என அங்குள்ள தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடராஜர் கோயிலை மையமாக வைத்து பல கட்ட போராட்டங்கள் நடந்து வருவதால் சிதம்பரம் நகரில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என கோட்டாட்சியர் ரவி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று கோட்டாட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், சிதம்பரம் நகரில் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். நடராஜர் கோயில் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் ஆராயப்பட்டு வருவதாகவும், தமிழக அரசின் உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள், பக்தர்கள், இதர அமைப்புகள் யாரும் சிதம்பரம் நடராஜர் கோயிலை மையமாக வைத்து போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது எனவும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

நேற்று முதலே தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், சிதம்பரம் நகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று முதல் விலக்கிக் கொள்வதாகவும், பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் ரவி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.