பள்ளி வாகனங்களில் இதெல்லாம் இனி கட்டாயம்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

School bus

தனியார் பள்ளிகளில் வாகனங்களை இயக்குவது தொடர்பாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள், அறிவுறுத்தல்கள் என்னென்ன?

பள்ளி வாகனங்கள்‌ பதிவு பள்ளி வாகனம்‌ என்பதற்கான அனுமதி ( School Permit )
போக்குவரத்துத்துறையால்‌ பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும்‌.

ஒவ்வொரு வாகனத்திற்கும்‌ தரச்சான்று உரிய காலத்தில்‌
புதுப்பிக்கப்படவேண்டும்‌.

பள்ளி வாகனங்களின்‌ தரச்சான்றினை புதுப்பிப்பதோடு அல்லாமல்‌ ஒவ்வொரு
ஆண்டும்‌ மாவட்ட அளவிலான குழுவினால்‌ ஆய்வு செய்யப்பட்டு அவற்றின்‌
தரத்தினை உறுதி செய்யப்பட வேண்டும்‌

ஒவ்வொரு பள்ளி வாகனமும்‌ காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்‌.

காப்பீடு உரிய காலத்தில்‌ புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

பள்ளி வாகனப்‌ பராமரிப்பு பள்ளி வாகனத்தின்‌ முன்னும்‌ பின்னும்‌ “ பள்ளி வாகனம்‌” என்று பெரிய எழுத்தில்‌ தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும்‌

ஒப்பந்த அடிப்படையில்‌ வாகனத்தை இயக்கினால்‌, “ பள்ளிப்‌ பணிக்காக மட்டும்‌”
என்று வாகனத்தின்‌ முன்னும்‌ பின்னும்‌ தெளிவாக எழுதியிருக்கவேண்டும்.

‌ஒவ்வொரு பள்ளி , வாகனத்திலும்‌ முதலுதவிப்பெட்டி கண்டிப்பாக
வைக்கப்பட்டிருக்க வேண்டும்‌

ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும்‌ தீயணைப்புக்‌ கருவி
பொருத்தப்பட்டிருக்கவேண்டும்‌.

தீயணைப்புக்‌ கருவி உரிய காலத்தில்‌ புதுப்பிக்கப்பட வேண்டும்‌.

ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும்‌ அந்தந்த பள்ளியின்‌ தொலைபேசி எண்‌
எழுதப்பட்டிருக்க வேண்டும்‌.

ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும்‌ “பாதுகாப்பு கிரில்‌” ( Horizontal Grills )
பொருத்தப்பட்டிருக்க வேண்டும்‌

.

மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத்‌ தெரியும்‌ வண்ணம்‌ பள்ளி
வாகனங்களுக்கு மஞ்சள்‌ வண்ணம்‌ பூசப்பட்டிருக்க வேண்டும்‌

புத்தகப்‌ பையினை பாதுகாப்பாக வைக்க இருக்கையின்‌ அடியில்‌ போதிய
இடவசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்‌

.

ஒவ்வொரு வாகனத்திலும்‌ விதிகளின்படி அவசரகால வழி இருக்கவேண்டும்‌

பள்ளி வாகனத்தின்‌ ஏறும்‌ படிக்கட்டுகளின்‌ உயரம்‌ விதிகளுக்கு உட்பட்டு
இருக்கவேண்டும்‌

.

ஒவ்வொரு பள்ளிவாகனத்திலும்‌ வேகக்கட்டுப்பாட்டுக்‌ கருவி
பொருத்தப்பட்டிருக்கவேண்டும்‌.

Leave a Reply

Your email address will not be published.