தயாராகுங்கள் குரூப் 4 தேர்வுக்கு… தேதிகளை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

tnpsc group 1 mains exam will be conducted in march 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வு மூலம் 274 கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

7,382 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 7,382 காலி பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை TNPSC குரூப் 4 தேர்வுகள் நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுகளில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.

100 கேள்விகள் தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும். 75 கேள்விகள் பொது அறிவு சார்ந்தவை. 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் தரவரிசை பட்டியலில் இடம்பெறுவார்கள்.

குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை TNPSC இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….