எப்போது முடியும் போர் – துபாய்  எக்ஸ்போவில் நடந்த சோகம்

 கடந்த 2021- ஆண்டு  அக்டோபர் மாதம் 1ம் தேதியிலிருந்து துபாய் எக்ஸ்போ 2022 நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த எக்ஸ்போவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அவர்களுடைய கலாச்சார, தொழில்நுட்ப சாதனைகளை உலகிற்கு காட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த எக்ஸ்போவில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளுக்கும் தனி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து அரங்கமும் மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில், உக்ரைன் அரங்கம் மட்டும் கலகலப்பின்றி இருந்தது. காரணம் ரஷ்யா- உக்ரைன் போர்.எக்ஸ்போவில்  உக்ரைன் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்த நான்கு மாடிகளிலும் பார்வையாளர்கள்  வண்ண வண்ண ஒட்டுத் தாள்களில் stop war, #standwithukraine , I love Ukraine என்றெல்லாம் எழுதி ஒட்டியிருக்கிறார்கள்.

பல்லாயிரக் கணக்கில் அரங்கின் சுவர்களிலும், வழிகளிலும் காட்சி இடங்களிலும் இந்த வண்ண தாள்கள் ஒட்டபட்டிருக்கிறது.மேலும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் முகத்திலும் சோகம் தான் குடி கொண்டிருந்தது.அவர்களுடைய கலாச்சார, தொழில் நுட்பச் சாதனைகளைப் பற்றி எடுத்துசொல்ல எந்த ஊழியரும் முனையவில்லை.அவர்கள் ஆதரவு தரும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். உலக நாடுகள் ஒன்று திரண்டு மகிழ்ச்சியாக இருக்கும் போது, ஒரு நாட்டிடம் மட்டும் போர் வேண்டாம் என்று அழுகை குரல் வந்து கொண்டிருக்கிறது. இந்த போர் விரைவில் முடிய வேண்டும் என்ற மக்களின் எண்ணம் விரைவில் நிறைவேற வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *