இனி அரசு பேருந்துகளில் பெண்களுக்கு ஸ்பெஷல் சலுகை… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்து போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி அரசு விரைவுப் பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் / குளிர்சாதனமில்லா பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க இரண்டு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பார்வையில் கண்ட மேலாண் இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி நமது கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் / குளிர்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கு தனியாக படுக்கை எண்:1 LB, மற்றும் 4 LB ஒதுக்கீடு செய்து இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை (பதிவேற்றம்) செய்யப்பட்டுள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தரவும் மற்றும் பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர மேற்கூறிய பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.