உயர்வு! உயர்வு!! சென்னை மக்களுக்கு அரசு கொடுத்த பேரதிர்ச்சி!

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின் அறிக்கையின்படி, சென்னையின் பிரதான நரைப் பகுதியில் 600 சது அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், சென்னையோடு 2011ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1201-1800 சது அப்பு பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 100 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 50 சதவீதம். 1201-1800 தும் அடி பரப்பளவுள்ள குருடியிருப்புகட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும், சென்னையோடு 2011 இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரியிளை உயர்த்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான (Core city) பகுதியில் 6240 சதவீதமும் ஆகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 188 சதவீதமும் அமைந்துள்ளது. ஆகவே. பெரும்பாவான மக்கள் 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதன் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.