பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு.. 

பாகிஸ்தானில் நிலவும் பணவீக்கம் மற்றும்  விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு பதவி விலக  வேண்டும் என எதிர்க்கட்சியினர்  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு  இன்று  காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இதனால் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இந்நிலையில் இம்ரான் கான் நாடாளுமன்ற சபையை வராத காரணத்தால்  சபையை ஒத்திவைப்பதாக  துணை சபாநாயகர் காசிம் கான் தெரிவித்தார். 

இம்ரான் கானின்  கட்சி உறுப்பினர்கள் 22 பேர் மட்டுமே சபைக்கு வந்த நிலையில் நாடாளுமன்ற  சபையை  வருகிற25-ம் தேதி ஒத்திவைத்தார். நம்பிக்கையில்லா  தீர்மானம் என்பது பாகிஸ்தான் அரசின் சாசனத்திற்கு எதிரானது என துணை சபாநாயகர் கருத்து தெரிவித்தார். 

இந்த நிலையில் இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களின் காணொளி வாயிலாக  உரையாற்றினார்.  அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்தது  சரியே, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும்,நாட்டை  யார் ஆள வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.   

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….