சென்னை அணிக்கு 181 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் 15-ஆவது சீசனில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

முன்னதாக, டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ராஜபக்சே 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து, ஷிகர் தவன் மற்றும் லயம் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஷிகர் தவன் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய லயம் லிவிங்ஸ்டன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.