இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் செயல்பட அனுமதி..!

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் அவை வழக்கம் போல இயங்கத் தொடங்கியுள்ளன. இதனை இலங்கை நாட்டின் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஊரடங்கு குறித்து இலங்கை அரசு கூறியதாவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டில் அவசர நிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை பாதுகாக்கவும், அரசு மற்றும் தனியா சொத்துக்களைப் பாதுகாக்கவும் இந்த அவசரகால ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரால் அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.