வட கொரிய நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்க அரசு

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து  பல ஏவுகணை சோதனைகளை நடத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை எதிர்த்து பல முறை வட கொரிய  இது போன்ற சோதனைகளை செய்து வருகிறது.   

அதை எதிர்க்கும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட  பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்தது. அதை கண்டுகொள்ளாமல், கடந்த சில தினங்களுக்கு முன்பும்  கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய  பாலிஸ்டிக் என்ற அதிநவீன ஏவுகணை சோதனை ஓட்டம் நடத்தியது.

இந்த ஏவுகணை சோதனைக்கு வட கொரிய ராக்கெட் தொழில் அமைச்சகம் மற்றும் துணைபோன வடகொரியா நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அதன்படி வட கொரியாவை சேர்ந்த அன்சோன் நிறுவனம், சன்னிசன் கார்ப்பரேஷன், கொரியா ரூன்சன், ஹப்ஜாங்காங் நிறுவனம், ஆகிய நிறுவனங்களில் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் தெரிவித்தார்.

இந்த பொருளாதார தடை மீறி அவர்களுடன் வணிகம் செய்யும் பிற நாடுகளையும் புறக்கணிக்க அமெரிக்க அரசு முடிவெடுத்து உள்ளதாக அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு  வடகொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் எந்தவித பதிலும் அளிக்காமல் தங்கள் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை கொண்டாடி வருகிறார். 

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…