1000-த்திற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்த ரஷ்யா

கடந்த ஒன்றரை மாதமாக உக்ரைன் – ரஷ்யா விற்கிடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் ஒவ்வொரு பகுதியாக ரஷ்யா படைகள் ஆக்கிரமித்து கொண்டு வருகிறார்கள். அப்பாவி மக்களை கொல்ல மாட்டோம் என்று உறுதி அளித்திருந்த ரஷ்ய இராணுவ படையினர்,  உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.இதனிடையே கடந்த 3 தினங்களுக்கு முன்பு புச்சா பகுதியில் 400க்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டில் மரியுபோலில் 1000-திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், “மரியுபோலில் ரஷியப் படையினர் ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை படுகொலை செய்ததை மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதும், காயமடைந்ததும் எனக்குத் தெரியும்” என்று கூறியிருந்தார்.

மேலும் தொடர்ந்து உக்ரைன் மீது  போரிட்டு வரும் ரஷ்யா, இன்று உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள எரிபொருள் சேமிப்பு தளத்தின் மீது ஏவுகணையால்  தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….