கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் விலை அதிரடி குறைப்பு..

கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு பின் படிப்படியாக விலையை குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலையானது ரூ.600 லிருந்து ரூ.225 ஆக குறைப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆக குறைக்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளது.
நாடு முழுவதும் நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான விலையை இந்நிறுவனங்கள் குறைந்துள்ளது என்பது கூடுதல் தகவல். இதை தொடர்ந்து இனி வாரம்தோறும் நடத்தப்பட மாபெரும் தடுப்பூசி முகாம்களை நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ துறை அமைப்பு தெரிவித்துள்ளது.