ரஷ்யாவின் கொடூர செயல்…தப்பி பிழைக்க உக்ரைன் பெண்கள் செய்த கொடூரம்..

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 45 வது நாளாக போர் தொடுத்து வரும் சூழ்நிலையில் போரை நிறுத்துமாறு பல நாடுகள் ரஷ்யா மீது கண்டனம் தெரிவித்தது. இருந்தும் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியை சந்தித்து வருவதால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தது.
இருந்து ரஷ்யா அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உக்கிரன் மீது போர் தொடுத்து வருகிறது. தற்போது ரஷ்யா ராணுவம் ஒரு படி மேல் சென்று உக்ரைனில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்து வருகிறனர்.
இதனால் கீவ்வில் வசிக்கும் இளம் பெண்கள் ரஷ்ய வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்வதை தவிர்ப்பதற்காக தங்கள் தலை முடியை முழுவதும் வெட்டி ஆண்களை போல் தோற்றமளித்தது தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆண்களை போல் தோற்றமளிக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் டான்பாஸ் மாகாணம் கர்மொடொர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் உக்ரைன் விட்டு வெளியேற கூடியிருந்தனர். அப்போது அங்கு ரஷ்யா ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. ரயில் நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நாங்கள் நடத்தவில்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.