சித்திரை திருவிழா ஸ்பெஷல்; “மாமதுரை” செயலி… என்னென்ன பயன்கள் தெரியுமா?

மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆண்டு சித்திரை திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்திட மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்துத் வருகிறது.
சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம். தேரோட்டம், எதிர்சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை காண்பதற்கு லட்சக்கணக்கானனோர் வருகைபுரிவார்கள்.
இத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை எந்த பகுதியில் நிறுத்துவது, சுவாமி வரும் வழிகள், மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள், கோவில் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்லும் வழித்தடம், திருவிழா நிகழ்ச்சிகளின் கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் தங்களின் மொபைல் போன் மூலமாக அறிந்து கொள்ள “மாமதுரை” என்ற செயவி உருவாக்கப்பட்டு இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
“மாமதுரை” செயலியை பொதுமக்கள் தங்களின் ஆண்ட்ராய்டு போனில் Google Play Store வாயிலாக “Maamadurai” என்ற செயலியை பதிவிறக்கம் (Download) செய்து சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழா தொடர்பான தகவல்களை தங்களின் செல்போன் மூலம் உடனுக்குடன் கண்டு பயன்பெறலாம்.