அமெரிக்காவில் நடந்த கொடூரம்..! துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார்?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் 29 பேர் வரை படுகாயம்  ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

எப்போதும் பரபரப்பாக இயங்கும் சன்செட் பார்க் மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் காலை 8.20 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். ரயில் சுரங்கப்பாதைக்கு வருவதற்கு சில நொடிகளுக்கு முன்னாள் கட்டுமான பணியாளர்கள் அணியும் கவச உடையும், முகமூடியும் அணிந்த மர்ம நபர் திடீரென்று புகை குண்டை மக்களிடைய வீசியுள்ளார். 

இதனால் ரயில் பெட்டி முழுவதும் புகை சூழ்ந்தது. சுரங்கப் பாதையில் ரயில் நின்றதும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுடப்பட்டுள்ளனர். மேலும் பயத்தில் தப்பி ஓடியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி  சுமார் 29 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் மர்ம நபரின் உருவப்படத்தை கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் பயன்படுத்திய கை துப்பாக்கி, கிரெடிட் கார்டு என பல சாதனங்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று  தெரியவில்லை என்றும் விரைவில்  அந்த மர்ம நபரை தேடி  பிடிப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  இந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் பயங்கரவாதிகளுக்கும்  எந்த தொடர்பும்  இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…