வெளியானது ரஷ்யாவின் சதி செயல்.. போலந்து அதிபர்  எப்படி கொல்லப்பட்டார்..?

போலந்து அதிபர் லெக் காசின்ஸ்கி கொல்லப்பட்ட விமான விபத்துக்கு,  ரஷ்யாவே காரணம் என்று தற்போது விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. போலந்து நாட்டின் அப்போதைய அதிபர் லெக் காசின்ஸ்கி கடந்த  2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி சோவியத் தயாரிப்பு விமானமான  டியூ-154 ஏம் விமானத்தில் ரஷ்யாவுக்கு சென்றார். 

இந்த விமானத்தில் அதிபர் லெக் காசின்ஸ்கியுடன்  அரவது மனைவி, மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் என 94 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் ரஷ்யா எல்லைக்குள் நுழைத்ததும் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் அதிபர் லெக் காசின்ஸ்கி உள்பட 95 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இந்த விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என்றும்,  இது மனித தவறால் ஏற்பட்ட  விபத்து என்றும் ரஷ்யா தனது அறிக்கையை தாக்கல் செய்தது.  இந்நிலையில் விமான விபத்து குறித்து விசாரிக்க போலந்து அரசால் ஒரு சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய விசாரணையில் இந்த விபத்துக்கு ரஷ்யா தான் காரணம் என்று நேற்று முன்தினம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் அதிபர் லெக் காசின்ஸ்கி உள்பட 95 பேர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷியாவின் சதியே காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து விசாரணை ஆணையத்தின் தலைவா் ஆன்டனி மெசியா்விக்ஸ் கூறுகையில் விமானத்தின் இடதுபுற இறக்கையில் முதல் குண்டும், மைய பகுதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published.