விளாடிமிர் புதின் ஒரு போர்க் குற்றவாளி..!! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ரஷ்யா போர் தொடங்கி இன்றுடன் 49 நாட்கள் எட்டிய நிலையில் இன்றும் இந்த போரானது முடிவுக்கு வரவில்லை. போர் தொடங்கிய நாள் முதலே அமெரிக்காவானது உக்ரைன் அரசுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது. 

அவ்வப்போது ராணுவ ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிம்  செய்து வருகிறது. ரஷ்யாவின் போர் அணுகுமுறையை பற்றியும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி  வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்ய அதிபர்  புதினை போர்க் குற்றவாளி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

தற்போது ரஷ்யாவானது இன அழிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அயோவா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ஜோ பைடன்,  உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்துவது நிச்சயமாக ஒரு இன அழிப்பு தான் என்றும் உக்ரைனில் மக்கள் யாரும்  இருக்கக் கூடாது என்பதுதான் புதினின் எண்ணமாக இருக்கிறது என்றும்  கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை இது ஒரு இன அழிப்பு என்றே தோன்றுகிறது என்று ரஷ்யாவை மிக கடுமையாக தாக்கி பேசியுள்ளார். 

இதை சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,  இது ஒரு உண்மையான தலைவரிடமிருந்து வந்துள்ள உண்மையான வார்த்தைகள் என்று கூறியுள்ளார். முன்னதாக கீவ் நகர் வரை முன்னேறி தாக்குதலை நடத்திய ரஷ்ய படைகள் தற்போது மரியுபோல் நகரைக் கைப்பற்ற அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களை தாக்க முயற்சி செய்து வருகிறது என உக்ரைன் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.