எச்சரிக்கை விடும் இம்ரான் கான்..!  நான் ஆபத்தானவனாக மாறிவிட்டேன்..

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை இழந்த இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  பதவியை இழந்த இம்ரான் கான், தன்னுடைய ஆட்சியை பறிக்க அமெரிக்க தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வருவதும் அதற்கு  இங்கு எதிர்கட்சியினர் சில உடன்படுவதும்  எனக்கு தெரியும். 

இந்த அநீதி செயலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இதற்கு மக்கள் பல இடங்களில் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் இந்த ஆதரவுக்கு  நன்றி தெரிவித்த இம்ரான் கான் அதை தொடர்ந்து பெஷாவரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். 

அப்போது இம்ரான் கான் கூறியதாவது, நான் பிரதமராக இருந்தபோது ஆபத்தானாவனாக இல்லை. ஆனால் இப்போது மிகவும் ஆபத்தானவனாக மாறியுள்ளேன். என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க சட்டவிரோத செயல்கள் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன் என தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பினார்.

நான் எதோ சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்தது போல் எதிர்கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி  வருகின்றனர். இது அனைத்தும் அமெரிக்காவின் சதி செயல் என்பதை மக்கள் உணர வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தினை நீங்கள்  ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு மக்கள் தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்களுக்கு  இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.