உக்ரைன் நடத்திய அதிரடி தாக்குதல்..  ரஷ்ய போர் கப்பல் கடலில் மூழ்கியது.. 

உக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் வேலையில், உக்ரைன் ராணுவ படையினர் ரஷ்ய படையின் போர்க்கப்பல் ஒன்றை  ஏவுகணை தாக்குதல் மூலம் கடலில் மூழ்கடித்துள்ளது. கருங்கடலில் இருந்து தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் போர் கப்பலை   உக்ரைன் தாக்கியதில்  தீப்பிடித்து கடலில் மூழ்கியுள்ளது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்தக் கப்பலை  உக்ரைனின் ராணுவம்  தாக்குதல் செய்ததில்  ரஷ்யா ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடுகிறது. 

இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டும் இந்த போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இந்நிலையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு வழிகாட்டியாக கருங்கடலில் இருந்து செயல்பட்டு வந்த மோஸ்கவா கப்பல் உக்ரைன் படையினரின் ஏவுகனை தாக்குதலில் மூலம் கடலில் மூழ்கியது. ஒடேசாவிற்கு தெற்கு பகுதியில் சுமார்  60 முதல் 65 மைல் கடல் தொலைவில் இந்த கப்பலை தாக்கியதாக ராணுவ  அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

ஆனால் இதை ரஷ்யா ராணுவம்  மறுத்துள்ளது. உக்ரைன் ஏவுகணை இந்தக் கப்பலை தாக்கியதாக உக்ரைன் கூறுகிறது. ஆனால், அப்படி எந்த தாக்குதலும் நடக்கவில்லை, கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததால் கப்பலின் வெளி கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக கப்பல்  தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கியது என ரஷ்யா கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….