நரிக்குறவர் இல்லத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட முதல்வர்… சிறுமிக்கு ஊட்டிவிட்டு நெகிழ்ச்சி!

திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஒருவரின் வீட்டிற்குச் சென்று இட்லி சாப்பிட்டு, சிறுமிக்கும் ஊட்டிவிட்டார்.

ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய் திறந்து வைத்து, நரிக்குறவர் மாணவிகள் எஸ்.தர்ஷினி, ஆர்.ப்ரியா, கே.திவ்யா ஆகியோருடன் கலந்துரையாடி, பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, பட்டா மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

Image

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி பேசிய வீடியோ வைரலானது அப்போது நரிக்குறவ மாணவிகளின் காணொலி வைரலானதையடுத்து, முதல்வர் வீடியோ காலில் அழைத்துப் பேசியிருந்தார்

வந்தால் சாப்பாடு போடுவீங்களா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டதற்கு, கறி சோறு போடுவோம் என்று பதிலளித்திருந்தனர். இந்நிலையில் ஆவடி நரிக்குறவர் குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய் திறந்து வைத்து, நரிக்குறவர் மாணவிகள் எஸ்.தர்ஷினி, ஆர்.ப்ரியா, கே.திவ்யா ஆகியோருடன் கலந்துரையாடி, வீட்டிற்கு சென்று கூறியபடி சிற்றுண்டி அருந்தினார் சிறுமிக்கு உணவு ஊட்டி விட்டார்.முன்னதாக சிறுவர்களின் ரோஜா பூ வை பெற்று கொண்ட முதல்வருக்கு பாசி மணி மாலை அணிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *