ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “தற்காலிக பதவி விலகல்” காரணம் என்ன..!!!

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த இரண்டு மாதமாக நடைபெறும் நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புது அதிர்ச்சி தகவலை நாட்டு மக்களுக்கு தந்துள்ளார். அதாவது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிபர் விளாதிமிர் புதின் பதவி விலகும் நிலையில் ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷே அதிபர் பொறுப்பை  ஏற்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிபர் புதின் புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இந்த அவசர முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்த தகவலை ரஷியாவின் முன்னாள் வெளியுறவு புலனாய்வுச் சேவையின் தலைவர் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டு தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். ரஷ்ய அதிபர் புதின் மேற்கொள்ளும் இந்த அறுவை சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சை என்பதால் புதின் தொடர்ந்து ஓய்வு பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் இந்த இடைப்பட்ட காலம் புதினுக்கு தற்காலிகமாக உடல் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். 

இந்த இக்கட்டான நிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் நடைபெறுவதால் என்ன செய்வது என புரியாமல் இருந்த புதின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேக்கு பொறுப்பை கொடுக்க புதின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *