மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!  இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் ஸ்வார்ன் பாக் காலணியில் உள்ள இரண்டு மாடி கட்டிடம் மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியது. இன்று காலை சுமார் மூணு மணி அளவில் அந்த குடியிருப்பில்  உள்ள மக்கள் அனைவரும்  தூங்கிக் கொண்டிருந்த போது, அந்த  கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள மின்சார விநியோக அமைப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டிடத்தின் அடித்தளத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகியது. இதன் மூலமாக தீ பரவி கட்டிடம் முழுவதும் மளமளவென எரியத் தொடங்கியது. இந்த தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருந்த போதிலும் இந்த தீ விபத்து மூலம் இதுவரை 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  தெரிவித்துள்ளார். மேலும் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இதில் 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என  காவல்துறை அதிகாரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறை அதிகாரி பேசுகையில் இந்த தீ விபத்து ஆனது இரண்டு மாடி கட்டிடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில்  மின் கசிவு ஏற்பட்டதால் மரணம் நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கட்டத்தின்  பாதுகாப்பு உபகரணங்களை எதுவும் நிறுவாமல்  அலட்சியமாக இருந்த கட்டிட உரிமையாளர் அன்சார் படேலின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது என்றார். இந்த மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *