அவசரநிலை பிரகடனம் வேண்டாம்..!!  இலங்கை அரசுக்கு உலக நாடுகள் கண்டனம்..!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்  விளைவாக மக்கள் இலங்கை அரசை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் ராஜபக்சே குடும்பம் பதவி விலக வேண்டும் என இலங்கை அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போராடுகிறது.

இந்த நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் பிறப்பித்து உள்ளது ராஜபக்சே அரசு. அரசின் இந்த செயலை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா,சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையமும் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் தங்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிக்கொண்டு இருக்கும் போது அவர்களை தடுப்பது தவறான செயல். அதற்கு பதில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

மேலும் அவசர நிலை பிரகடனம் செய்வதால் நாட்டின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்றும் தெரிவித்துள்ளது. நீண்டகால தீர்வுக்கு தான்  மக்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்காமல்  அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தியது கண்டனத்திற்குரிய செயல் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறைத்தது பழைய நிலைக்கு மீண்டும் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *